“ஜனவரிக்குள் இது கண்டிப்பாக நடக்கும்! தவெகவை பலப்படுத்த வேண்டியது என்னுடைய பொறுப்பு”- செங்கோட்டையன்
Dec 11, 2025, 19:16 IST1765460789598
ஜனவரியில் உங்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுக்க இருக்கிறேன் என தவெக நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இன்று நடந்த தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், “ஜனவரி மாதத்திற்குள் உங்களுக்கு அடுத்த அதிர்ச்சி கொடுக்க இருக்கிறேன். அதிருப்தியில் இருக்கும் பல முன்னாள் அமைச்சர்கள், MLAக்களை தவெகவில் இணைக்க முயற்சி செய்வேன். மாவட்ட செயலாளர்கள் எந்த பிரச்னையாக இருந்தாலும் எனக்கு தொடர்பு கொள்ளுங்கள். நான் பார்த்து கொள்கிறேன். தவெக மற்றொரு அதிமுகவாக மாறும், இனிமேல் அதிமுக கிடையாது, தவெகவை பலப்படுத்தும் பொறுப்பு என்னுடையது” என்றார்.


