“திடீரென மலைப்பாம்பு போல் வந்தவர் முதல்வராகி ரூ.50,000 கோடி சம்பாதித்துள்ளார்”- செங்கோட்டையன்
நடைபெறும் சட்டமன்ற பொது தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் விஜய் பாலாஜி மற்றும் மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஆனந்த் மோகன் ஆகியோரை ஆதரித்து அக்கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஈரோடு மரப்பாலம், சோலார் உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய செங்கோட்டையன், “10- முறை தோற்ற எடப்பாடி பழனிசாமியால் திமுகவை தோற்கடிக்க முடியாது. ஆள் இல்லாத கட்சியான வாசன் கட்சியாலும் வெற்றி பெற முடியாது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இரு தொகுதிகளில் நிற்கிறார்கள். அதிமுக கூட்டணியில் நிற்கும் தமாக இந்த தொகுதியில் டெபாசிட் கூட பெற போவதில்லை. நான் முதல்வராக வந்து இருக்க வவேண்டும் எடப்பாடி பழனிசாமி வந்து 50,000 கோடி ரூபாய் கொள்ளையடித்து விட்டு சென்றுவிட்டார். எம்ஜிஆர், ஜெயலலிதா பிறகு தமிழகத்தை ஆளும் சக்தி விஜய்க்கு உள்ளது. நேற்று ஈரோட்டிற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்தார். இது போன்ற கூட்டம் கூடுவதற்கு 5-கோடி ரூபாய் செலவு செய்தார்கள். ஓட்டு போடாத குழந்தைகள் வாக்குப்பதிவு அன்று விசில் சின்னத்தில் வாக்கு போட்டு வந்தால் தான் சாப்பிடுவேன் என்று தாத்தா, பாட்டி பெற்றோரிடம் சொல்ல வேண்டும்... ஏன் என்றால் உங்களுக்கான காலம்.
எனக்கு பெட்டி இருந்தால் நானே முதல்வராக ஆகி இருப்பேன்,சசிகலா சட்டமன்றத் குழு தலைவராக என்னை அறிவித்தார். அப்போது திடீரென மலைபாம்பு போல சசிகலா காலில் விழுந்தார். டிடிவி, ஓபிஎஸ் ஆகியோருக்கு துரோகம் செய்வதர் எடப்பாடி பழனிசாமி. துரோகத்திற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமிக்கு தான் கொடுக்க வேண்டும்” என்றார்.


