கோவையை ஸ்தம்பிக்க வைத்த தவெக ஆர்ப்பாட்டம்... திமுகவுக்கு எதிராக பெண்கள் கோஷம்

 
அ அ

கோவை மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து கோவையில் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ச்

கோவை விமான நிலையம் அருகே பிருந்தாவன் நகர் பகுதியில் நேற்று முன்தினம் சுமார் 11 மணியளவில் கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். ஆள் நடமாட்டமற்ற அப்பகுதிக்கு அப்போது வந்த 3 பேர் கொண்ட கும்பல் காரில் இருந்த கல்லூரி மாணவியின் ஆண் நண்பரை கடுமையாக தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த ஆண் நண்பர் மயங்கியுள்ளார். பின்னர், கல்லூரி மாணவியை அப்பகுதியில் உள்ள மறைவான இடத்திற்கு தூக்கிச்சென்ற அந்த கும்பல் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. இதையடுத்து, தாக்குதலில் மயக்கமடைந்த ஆண் நண்பர் மயக்கம் தெரிந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் தீவிர தேடுதலுக்குப்பின் உயிருக்கு ஆபத்தான நிலையில் கல்லூரி மாணவியை மீட்டுள்ளனர். மேலும் குற்றவாளிகள் 3 பேரை தனிப்படை போலீசார் சுட்டு பிடித்துள்ளனர்.



இந்நிலையில் கோவை மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழக வெற்றிக் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் பலரும் கொடிகள் மற்றும் பதாகைகளை ஏந்தியபடி கலந்துகொண்டனர். மேலும் திமுகவுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.