“ஆதரிக்க எடப்பாடியார் போதும்”- ஈரோட்டில் தவெக சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனர்

 
ந் ந்

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட அவல் பூந்துறையில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் அவரை வரவேற்று தமிழக வெற்றிக்கழகத்தினர் பேனர்களை வைத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட அவல் பூந்துறையில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் அவரை வரவேற்று தமிழக வெற்றிக்கழகத்தினர் பேனர்களை வைத்துள்ளனர். அதில், “நாளை நமதே.. எங்களுடைய கஷ்டமான காலங்களில் எங்களுக்கு தோல் கொடுத்த எடப்பாடி யாருக்கு நாங்கள் என்றும் கடமைப்பட்டுள்ளோம்.. விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகம்.. ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தரும் எடப்பாடியாரை வரவேற்கிறோம்..

தலைவா உன்னை எதிர்க்க ஆயிரம் எதிரிகள் இருந்தாலும் உன்னை ஆதரிக்க எடப்பாடியார் போதும்.. விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றி கழகம்” என விஜய் மற்றும் எடப்பாடி பழனிசாமி படத்துடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மற்றும் நாமக்கல்லில் எடப்பாடி பிரச்சாரக் கூட்டங்களில் தவெக கொடிகளை மட்டும் சிலர் பயன்படுத்திய  நிலையில் தற்பொழுது தவெகவினர் பேனர்களை வைத்துள்ளனர்.