“விஜய்க்கு ஓட்டு போட முடியாது”- தவெகவினரை விரட்டி அடித்த முதியவர்
விஜய்க்கு வாக்களிக்க மாட்டோம் எனக் கூறிய முதியவரிடம் வாக்குவாதம் செய்த த.வெ.கவினரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி கிழக்கு தொகுதியில் த.வெ.க தலைவர் விஜய் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக த.வெ.கவினர் கே.கே.நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சிவக்குமார் என்பவரின் வீட்டிற்கு சென்று விஜய்க்கு ஆதரவாக வாக்களிக்க கேட்டனர். அப்பொழுது அவர் எங்களுக்கு த.வெ.கவிற்கு வாக்களிக்க விருப்பமில்லை என கூறியுள்ளார். இதனால் அக்கட்சியினர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த சிவக்குமார் தன் வீட்டிலிருந்த கட்டையை எடுத்து வீசி உள்ளார் அதில் பிரச்சாரம் செய்ய வந்த பெண்ணின் கையில் லேசான காயம் ஏற்பட்டது.
தவெக சார்பாக ஓட்டு கேட்க சென்றவர்களை தவறாக பேசி விரட்டி அடித்த முதியவர்!#Trichy #TVKVijay #TVK #ElectionCampaign #ViralVideo #MadhimugamTV pic.twitter.com/AhBnHHoiUM
— Madhimugam TV (@madhimugam_tv) April 16, 2026
இது தொடர்பாக த.வெ.கவிபர் கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின் அடிப்படையில் சிவக்குமார் மீது கேகே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பிரச்சாரம் செய்ய வந்து தன்னை தொந்தரவு செய்து தகாத வார்த்தையால் பேசியதாக சிவகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் த.வெ.க நிர்வாகி வெள்ளதுரை உள்ளிட்ட ஆறு பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


