“செந்தில் பாலாஜியை கைது செய்ங்க”- பரபரப்பு கடிதத்தை வெளியிட்டு தவெக நிர்வாகி தற்கொலை

 
ச்

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டுமெனக் கூறி விழுப்புரம் மாவட்டம் தவெக நிர்வாகி ஒருவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Image

கரூரில் தமிழக வெற்றி கழக கூட்டத்தில் நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம் என்று குற்றம்சாட்டி கடிதம் எழுதி வைத்து விட்டு விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்துக்கு உட்பட்ட விற்பட்டு த.வெ.க கிளை செயலாளர் ஐயப்பன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

விஜய் பிரச்சாரத்தில் 41 நபர்கள் பலி; கடிதம் எழுதி வைத்துவிட்டு தவெக நிர்வாகி  தற்கொலை - My CIty Trichy News

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தோரின் துயரம் தாங்க முடியவில்லை. தவெக நிர்வாகியாக இருந்தும், இந்த பேரழிவில் எதையும் செய்ய முடியாமல் போனது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு செந்தில் பாலாஜி தான் காரணம். போலீசும் இதற்கு உடந்தையாக இருந்தார்கள் . விஜய் வருகையின்போது போதிய பாதுகாப்ப்பும் இல்லை. விஜய் ரசிகர்கள் நன்றாக வேலை செய்தார்கள். ஆனால் செந்தில்பாலாஜி நூதன முறையில் நெருக்கடி கொடுத்து இந்த துயரம் சம்பவம் நடைபெற்றது. செந்தில்பாலாஜியை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.