விருப்ப மனு வாங்கி ரூ.6 கோடி மோசடி செய்த புஸ்ஸி ஆனந்த்- தவெக தொண்டர் பரபரப்பு புகார்

 
s

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்விருப்ப மனு வாங்கி ரூ.6 கோடி மோசடி செய்ததாக தேர்தல் ஆணையத்தில் தவெக தொண்டர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர் அறந்தாங்கி பிரபு, “முதன்முதலாக விஜய் கட்சி ஆரம்பித்த உடன் அவரது கட்சியின் நான் இணைந்துகொண்டேன். விஜயின் தீவிர ரசிகன் நான். பிறகு புஸ்ஸி ஆனந்த்தை சந்தித்தேன். அப்போது அறந்தாங்கி தொகுதியில் நீங்கதான் எம்.எல்.ஏ வேட்பாளர் என அவர் நம்பிக்கை கொடுத்தார். இதனால் எனது தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து கட்சிக்காக உழைத்தேன். ஒரு ஆண்டுக்கு முன்னரே தவெகவில் 234 தொகுதிகளுக்கும் புஸ்ஸி ஆனந்த் வேட்பாளரை நியமனம் செய்தார். அதில் நானும் ஒருவன். ஆனால் அவர்களை வேட்பாளர்களாக அறிவிக்காமல், விருப்பமனு என்ற பெயரில் மோசடி செய்து ஒருதரைக்கூட அழைத்து நேர்காணல் செய்யாமல் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். பின் எதற்காக இவர்கள் ஊழலை ஒழிப்போம் என சொல்கிறோம். விருப்பமனு விநியோகம் மூலம் 6 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். விருப்பமனு கொடுத்த யாரையும், புஸ்ஸி ஆனந்த் நேர்காணல் செய்ய விடவில்லை. அவர் நம்பிக்கை மோசடி செய்துள்ளார். தீய சக்தி திமுகவா? தி.நகரில் இந்த பணத்தை வைத்துதான் புஸ்ஸி ஆனந்த் செலவு செய்கிறார். தவெகவில் இருக்கும் தீய சக்தியை முதலில் ஒழிங்க விஜய்.

ஒரு தலைவர் மாவட்ட தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகள் என்ன செய்கிறார்கள், அவர்கள் நடவடிக்கை என்ன என்பதை பார்க்க வேண்டும். ஆனால் மோசமாக தவெக சென்றுகொண்டிருக்கிறது. ஒரு விருப்பமனுவுக்கு ரூ.10,000 வசூலித்து புஸ்ஸி ஆனந்த் தவெகவில் மோசடி செய்கிறார். உங்களை நம்பி வந்த யாரையும் நம்பிக்கை மோசடி செய்யாதவாறு விஜய் பார்த்துக்கொள்ள வேண்டும். கட்சியில் இருப்பவர்களை கண்டிக்க வேண்டும்” என்றார்.