"கரூர் வழக்கில் சிக்க வைத்துவிட்டு சீட் தரல”- தவெக மீதான அதிருப்தியில் அதிமுகவில் இணைந்த நிர்வாகி

 
ச்

கரூர் வழக்கில் கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகி அ.தி.மு.க-வில் இணைந்தார்.


கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி விஜய் கரூர் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இதுதொடர்பான வழக்கில் தவெக கரூர் மாநகர செயலாளர் பவுன்ராஜை போலீசார் கைது செய்தனர். கைதாகி ஜாமீனில் வெளியே வந்த பவுன்ராஜ் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்தார். ஆனால் 
கரூர் வழக்கில் கைதாகி சிறை சென்று திரும்பிய பவுன்ராஜூக்கு தவெக தலைவர் விஜய் சீட் தரவில்லை. தவெகவில் தேர்தல் சீட் மறுக்கப்பட்டதால் கரூர் மாநகர செயலாளர் பவுன்ராஜ் அதிமுகவில் இணைந்தார். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.