#BREAKING பாமக நாளை நடத்தும் போராட்டத்தில் தவெக பங்கேற்காது
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத தமிழக அரசை எதிர்த்து பாமகவின் சார்பில் நாளை நடைபெறுன் போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி நாளை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தரப்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தவெகவிற்கு அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்து எழுதிய கடிதத்தை வழக்கறிஞர் பாலு, தவெகவின் தலைமை அலுவலகத்திற்கு சென்று பொதுச்செயலாளர் என்.ஆனந்திடம் கொடுத்தார். இந்த நிலையில் தவெக அந்தப் போராட்டத்தில் பங்கேற்கது என தகவல்கள் தெரிவிக்கின்றன. பாமக நாளை நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவை தொடர்ந்து தவெகவும் பங்கேற்காது எனக் கூறப்படுகிறது. நாளை மறுநாள் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு ஈரோட்டில் நடைபெறுகிறது. எனவே, அக்கட்சியின் தலைவர்கள் பொதுக்கூட்டத்தின் வேலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


