“இந்த எதிர்பாராத மரணத்திற்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்”- நிர்மல்குமார்

 
“விஜய்க்கு மக்கள் அளிக்கும் செல்வாக்கை கண்டு திமுகவுக்கு பயம் வந்துவிட்டது”- நிர்மல்குமார் “விஜய்க்கு மக்கள் அளிக்கும் செல்வாக்கை கண்டு திமுகவுக்கு பயம் வந்துவிட்டது”- நிர்மல்குமார்

சேலத்தில் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்ற வெள்ளிப் பட்டறை தொழிலாளி சூரஜ் (37) உயிரிழந்த நிலையில், இச்சம்பவத்துக்கு தவெக இணைப்பொதுச்செயலாளர் CTR நிர்மல் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தவெக யாருடன் கூட்டணி? போட்டுடைத்த சிடிஆர் நிர்மல் குமார்! - tvk ctr  nirmalkumar talks about alliance brk - Samayam Tamil

சேலத்தில் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்ற வெள்ளிப் பட்டறை தொழிலாளி சூரஜ் (37) உயிரிழந்தார். 3 மணிநேரம் வெயிலில் நின்றிருந்ததால் மயக்கமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள தவெக இணைப்பொதுச்செயலாளர் CTR நிர்மல் குமார், “இன்று தவெக சார்பில் சேலதில் நடைபெற்ற கூட்டத்தைக் காண வந்த சூரஜ் என்ற இளைஞர் திடீர் உடல்நலக்குறைவால் மயங்கி உள்ளார் அவருக்கு உடனடியாக முதலுதவி செய்யபட்டு கழக நிர்வாகிகள் சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் மாரடைப்பால் சூரஜ் மரணமடைந்தது வேதனை அளிக்கிறது. இளைஞர் சூரஜின் இந்த எதிர்பாராத மரணத்திற்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement