பிரச்சாரம் ரத்து என்பதில் உண்மை இல்லை... விஜய் 24 மணி நேரமும் களத்தில் இறங்க தயார்- நிர்மல் குமார்

 
s

பிரச்சாரம் ரத்து என செய்திகள் தானாகவே போடப்படுகிறது, யாருடைய பேச்சின் அடிப்படையில் வெளியிடுகிறார்கள் என தெரியவில்லை என தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நிர்மல்குமார், “பிரச்சாரம் ரத்து என செய்திகள் தானாகவே போடப்படுகிறது. எதுவுமே ரத்து ஆகல. அது தவறான செய்தி. நாங்கள் கிளாரிஃபை பண்ண வேண்டியிருக்கு. அது முற்றிலும் தவறான செய்தி. எங்கேயும் நாங்கள் கடலூர் போறோம் என அறிவிக்கவே இல்லை. கடலூருக்கு வேறு ஒரு நாள் திட்டமிட்டிருந்தோம். ஆனால் அது பாண்டிச்சேரி எலக்சன் கருதி அவர்கள் அங்கே அப்ரூவல் கொடுக்கல. அதனால் வேறு ஒரு நாள் முடிவு செய்தோம். ஆனால் ஒவ்வொரு இடத்திலும் செய்திகள் தானாகவே போடப்படுது. நிறைய நியூஸ் சேனல்ல அது யாருடைய இன்ஃப்ளூயன்ஸ்ல போடுறாங்கன்னு தெரியல. அவங்களே போடுறாங்க, அவங்களே ரத்துன்னு போடுறாங்க.  இப்ப நான் ஒரு Date போட்டு கொடுக்கறேன்னு வச்சுக்கோங்க. ஒரு நாள் கழிச்சு ஒரு நாள் முன்னாடி வந்து “இந்த இடம் உங்களுக்கு சரியா இருக்காது, வேற இடத்தை தேர்வு செய்யுங்க”ன்னு சொல்லுவாங்க. நான் திரும்ப வேற இடம் தேர்வு செய்றதுக்குள்ள அந்த நாள் முடிஞ்சு போயிரும். இப்ப இதான் எங்களுக்கு பிராக்டிக்கல் டிஃபிகல்ட்டி சொல்றோம். அவங்க தேர்வு செய்த இடங்களை தேர்ந்தெடுத்தாலும் அவங்க என்ன சொல்லுவாங்க? “உங்க கூட்டத்துக்கு செட் ஆகுதும்பா”ங்க. சோ இது எங்களுக்கு பிராக்டிக்கல் டிஃபிகல்டீஸ் இந்த ரெண்டு இடத்துல தான் வருது. அதை வந்து உடனே இப்ப நாங்க அப்ளை பண்ண உடனே, ஒரு 2 hours குள்ள சொல்லிட்டாங்கன்னா நாங்க உடனே வேற தேதிகள், வேற இடங்கள் மாத்தி அப்ளை பண்ணிடுவோம். ஒரு நாள் கடந்து சொல்றப்பதான் அதனாலதான் எங்களுடைய அறிவிப்புகளும் எப்பயுமே கடைசி 12 மணி நேரம், 15 மணி 352நேரம் நாங்க அறிவிப்புகளே பண்றோம். அபிஷியல் அறிவிப்பு. எங்களுக்கு அப்ரூவல் எல்லாம் வந்து, கையில அந்த கண்டிஷன்ஸ் பேப்பர் எல்லாம் வந்த பிறகுதான் நாங்க அறிவிப்புகளே பண்ண முடியும். சோ இதான் எங்களுக்கு இருக்கிற பிராக்டிக்கல் டிஃபிகல்ட்டி.

பிரச்சாரம் ரத்து என்பதில் உண்மை இல்லை... விஜய் 24 மணி நேரமும் களத்தில் இறங்க தயார். இதுல நிறைய இடத்துல பேசக்கூடாது. கண்டிப்பா பேசக்கூடாதுன்னா அது ஏன்னா, இப்ப நிறைய பேர் சொன்னாங்க “காரைக்குடியில ஏன் பேசல”ன்னு. ஏன்னா அனுமதியை மீறி பேசுறது எங்களுக்கு பெரிய விஷயம் இல்ல. ஆனால் அங்க வேற ஏதாவது பொதுமக்களுக்கு அசம்பாவிதம் நடந்திரக்கூடாதுன்னு சொல்லிட்டுத்தான் விஜய் பேசவில்லை. ஒரே காரணத்துக்காகத்தான் கண்டிப்பாக என்ன இருக்குதோ, என்ன எங்களுக்கு காவல்துறையில வழிகாட்டி இருக்காங்களோ அதுக்குள்ள நாங்க நடந்துக்கணும்னு நினைக்கிறோம். எல்லாத்தையும் விட பொதுமக்களுடைய பாதுகாப்பு முக்கியம் என்ற கருத்துல மட்டும் தான் இருக்கும்” என்றார்.