விஜய்யை பார்த்து அமைச்சர் நேருவுக்கு ஏன் ஆத்திரம்?- நாஞ்சில் சம்பத்
எந்த அழுத்தத்திற்கும் அடிபணிகிறவன் நான் இல்லை என்று முழங்கிய எங்கள் தலைவரை பார்த்து அமைச்சர் நேருவுக்கு ஏன் ஆத்திரம்? என தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்றவர்தான் இன்றைக்கு வீர வசனம் பேசுகிறார் என அமைச்சர் நேரு தவெக தலைவர் விஜய்யை சாடிய நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தளத்தில், “தலைவர் விஜயை குறைகாணும் நேரு, முதலில் தன் முகத்தை கண்ணாடியில் காணட்டும்..! எந்த அழுத்தத்திற்கும் அடிபணிகிறவன் நான் இல்லை என்று முழங்கிய எங்கள் தலைவரை பார்த்து அமைச்சர் நேருவுக்கு ஏன் ஆத்திரம்? ஒரு படம் வெளிவருவதில் வரும் இடையூறை அதிகாரத்திலிருக்கிற முதலமைச்சரை சந்தித்து தீர்வு காண கேட்டால் அது என்ன பஞ்சமா? பாதகமா?
தலைவர் விஜயை குறைகாணும் நேரு, முதலில் தன் முகத்தை கண்ணாடியில் காணட்டும்..!
— Nanjil Sampath (@NanjilPSampath) January 27, 2026
எந்த அழுத்தத்திற்கும் அடிபணிகிறவன் நான் இல்லை என்று முழங்கிய எங்கள் தலைவரை பார்த்து அமைச்சர் நேருவுக்கு ஏன் ஆத்திரம்?
ஒரு படம் வெளிவருவதில் வரும் இடையூறை அதிகாரத்திலிருக்கிற முதலமைச்சரை சந்தித்து…

தவெக வை பற்றி கவலைப்படுகின்ற நேரு தன்னுடைய துறையில் 2000கோடிக்கு மேல் நடந்த முறைகேடுக்கு ED விடுத்த நோட்டிசுக்கு எங்கெல்லாம் ஓடி ஒழிந்தார்? கிழிவது ஒரு இடம்? தைப்பது ஒரு இடமா? முதலில் உங்கள் கிழிசலை தைத்துக்கொள்ளுங்கள்..!” எனக் குறிப்பிட்டுள்ளார்.