"தவெக மீதுதான் காதல்... கல்யாணம் செய்துகொண்டது திமுகவை”- நாஞ்சில் சம்பத் சொன்ன புது விஷயம்

 
Nanjil Nanjil

தவெக மீது தங்களுக்கு காதல் இருப்பதாகவும்... ஆனால் திமுகவை திருமணம் செய்து விட்டதாக காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் என்னிடம் பேசினார் என தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத், “தவெக உடன் மீது கூட்டணி வைக்க எல்லோரும் ஆசைப்படுகிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கும் ஆசை இருக்கிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரிடம் நீங்கள் தவெகவுடன் கூட்டணி வைக்க முயற்சிக்கிறீர்களா என்று கேட்டேன். அதற்கு,  எங்களுக்கும் தவெகவின் மீது தங்களுக்கு காதல் இருப்பதாகவும் ஆனால் திமுகவை திருமணம் செய்து விட்டதாகவும், காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர் என்னிடம் வருத்தத்துடன் பேசினார்.

கேரளாவில் மம்மூட்டி ,மோகன்லாலுக்கு நிகரான செல்வாக்கு விஜய்க்கு இருக்கிறது. 2026 தேர்தல் தமிழகத்தில் நடக்கும் போது கேரளாவிலும் நடக்கும், ஆகவே விஜய் அங்கும் தேவைப்படுவார். பாண்டிச்சேரி, தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திராவிலும் காங்கிரஸுக்கு தேவைப்படுவார். 2029 பாராளுமன்ற தேர்தலை சந்திக்க விஜய் நல்ல வாய்ப்பாக இருப்பார் என்று காங்கிரஸ் விரும்புகிறது. எங்கள் தலைவர் எடுக்க போகும் முடிவு, காங்கிரஸ் கையில் தான் உள்ளது” என்றார்.