நீர்மோர் பந்தல்களை திறக்க தவெக தலைமை உத்தரவு

 
anand

இந்த வெக்கையைச் சமாளிக்க, கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கழக நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் பொதுமக்களின் தாகத்தைப் போக்கும் வகையில் நீர்மோர்ப் பந்தல்களைத் திறக்க வேண்டும் என தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் கூறியுள்ளார்.

இதுகுறித்து தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தனது எக்ஸ் தளத்தில், “சுட்டெரிக்கும் கோடை வெயிலால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தங்களது அன்றாடத் தேவைகளுக்காக வெளியே வருவோருக்கு, நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இது குறித்த விழிப்புணர்வு, மக்களுக்கு அவசியம் தேவை.இந்த வெக்கையைச் சமாளிக்க, கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கழக நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் பொதுமக்களின் தாகத்தைப் போக்கும் வகையில் நீர்மோர்ப் பந்தல்களைத் திறக்க வேண்டும். பழச்சாறு, இளநீர், மோர், குடிநீர், வெள்ளரிக்காய், நுங்கு உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.