செங்கோட்டையனுடன் மனக்கசப்பா?- என். ஆனந்த் பதில்
Jan 21, 2026, 20:20 IST1769007041820
செங்கோட்டையனுடன் மனக்கசப்பு என்பதெல்லாம் கிடையாது என தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பிரச்சார குழு ஆலோசனைக் கூட்டம் சென்னையை அடுத்துள்ள பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், “செங்கோட்டையனுடன் மனக்கசப்பு என்பதெல்லாம் கிடையாது. எனக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே சண்டை என்றெல்லாம் செய்தி போடுகிறார்கள். நாங்கள் அனைவருமே ஒற்றுமையுடன் இருக்கிறோம். எங்களிடம் சின்னச்சின்ன சண்டைகள் கூட இல்லை. எங்களைப் பொறுத்தவரை விஜய்யின் கீழ் அனைவருமே தொண்டர்கள்தான்.


