”விஜய் பங்கேற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சியின் அழைப்பிதழை கிழித்து எறிந்த நபர்... உண்மையான இஸ்லாமியர்கள் அப்படி செய்யமாட்டாங்க”- ஆனந்த்

 
ச்

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகம் சார்பாக பிரிக்கப்பட்ட 120 மாவட்டங்களில் இருந்து தலா ஐந்து இஸ்லாமிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது மேலும் முக்கிய மசூதிகளுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தது. ஒட்டுமொத்தமாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு நோன்பு கஞ்சி மற்றும் மட்டன் பிரியாணி தயார் செய்யப்பட்டது. இந்த விழாவில் விஜயுடன் தமிழ்நாடு துணை தலைமை ஹாஜி, இமாம் முகமது மன்சூர் காசிப், தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் முஸ்தபா, கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Image

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த இஸ்லாமியர்கள் வெயிலில் நீண்ட நேரம் நிற்க வைத்து பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் விழா தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே தலைவர் விஜய் அரங்கிற்கு வருகை தந்தார். சரியாக 6.24 மணிக்கு நோன்பு திறக்கும் நிகழ்வு தொடங்கியது அரங்கில் கூடியிருந்த இஸ்லாமிய சகோதரர்களுடன் விஜயும் இஸ்லாமிய முறைப்படி வழிபட்டு நோன்பு திறந்தார். விஜய் வருகை அறிந்த பொதுமக்கள் ரசிகர்கள் பலரும் பேரிக்கடைகளை தாண்டி முண்டி எடுத்துக்கொண்டு விழா அரங்கிற்குள் சென்றதால் தள்ளுமுள்ளும், பவுன்சர்களுடன் வாக்குவாதமும் ஏற்பட்டது. சில இஸ்லாமியர்கள் முறையான ஏற்பாடு செய்யாததால் தமிழக வெற்றி கழகம் சார்பாக வழங்கப்பட்ட அழைப்பிதழை கிழித்திருந்து இஸ்லாமிய அல்லாத சகோதரர்களும் இதில் கலந்து கொண்டுள்ளதாகவும் குறிப்பாக மது அருந்திவிட்டும் சிலர் வந்திருப்பதாகவும் குற்றம் சாட்டினர். 

நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு பிறகு இஸ்லாமிய சகோதரர்களுடன் விஜய் கலந்து கொண்டதற்காக நன்றியை தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார். நிகழ்வு முடிந்து கிளம்பும் பொழுது விஜய்க்கு சாலையின் இரு புறமும் வரவேற்பு வழங்கப்பட்டது. aநோன்பு திறக்கும் நிகழ்விற்குப் பிறகு பொட்டலம் செய்து வைக்கப்பட்டிருந்த மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது கட்டுக்கடங்காத கூட்டத்தால் பிரியாணி வாங்குவதற்காக மக்கள் முண்டியடித்து கொண்டனர். நிகழ்விற்கு பிறகு பேசிய கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் தமிழக வெற்றி கழகம் சார்பாக நோன்பு திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது என்றார். பல இஸ்லாமியர்களுக்கு சரிவர ஏற்பாடு செய்யப்படவில்லை, இதனால் அழைப்பிதழை கிழித்து எறிந்து விட்டு சென்றதாக எழுப்பிய கேள்விக்கு, உண்மையான இஸ்லாமியர்கள் அப்படி செய்ய மாட்டார்கள் என சாட்சியாக பேசினார்.