“திருமாவை மேடையில் உட்கார வைக்க வேண்டாம் என சொன்னேன்”- என்.ஆனந்த்

 
“திருமாவை மேடையில் உட்கார வைக்க வேண்டாம் என சொன்னேன்”- என்.ஆனந்த்

தமிழ்நாட்டில் 20, 30 வருடம் ஆனாலும் தலைவர் தளபதி விஜய் தான் முதல்வராக இருப்பார், அதற்கு கூட்டணி கட்சி தலைவர்கள் என்றென்றும் உறுதுணையாக இருப்பார்கள் என அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் சவால் விடுத்துள்ளார்.

மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து நடைபெறும்  கூட்டணி கட்சித் தலைவர்கள் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், “தமிழ்நாட்டில் 20, 30 வருடம் ஆனாலும் தலைவர் தளபதி விஜய் தான் முதல்வராக இருப்பார், அதற்கு கூட்டணி கட்சி தலைவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திருமா அண்ணனை மேடையில் உட்கார வைத்தால் தொண்டர்கள் எல்லாம் மேடைக்கு வந்துவிடுவார்கள் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் சொன்னேன். அதற்கு அவர், ‘நான் இரண்டு தடவை மாநாடு நடத்தி இருக்கிறேன். நீங்கள் பயப்பட வேண்டாம்' என்று ஆதவ் அர்ஜூனா சொன்னார்.

திருமாவளவன் தவெகவுடன் இருப்பதே எங்களுக்கு பெரிய பலம். நாளைக்கு மதுராந்தகம் CM விஜய் அண்ணா வீடு வீடாக வந்து ஓட்டு சேகரிக்க வர போகிறார். மக்களுக்கான ஆட்சி இது. எப்போதும் மக்களின் நலனுக்காக வேலை செய்ய காத்திருக்கிறோம். திருமா அண்ணன் வந்துவிட்டார்.. இதுவே விசில் சின்னத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.. மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலின் வெற்றி 150% உறுதி. அண்ணன் வைகோ முன்னாடி எப்படி பேசப்போறேன்னு எனக்கே தெரியல, அவர் அப்பேர்பட்ட பேச்சாளர். ஊழல் செய்யாத தலைவர்கள் இங்கே அமர்ந்துள்ளனர். இது தமிழக முதல்வர் விஜயால் மட்டுமே சாத்தியமாகியுள்ளது. முதலமைச்சர் விஜயுடன் திருமாவளவன் இருப்பது பெரிய பலம்” என்றார்.