அரசு விழாவை புறக்கணித்த தவெக எம்.எல்.ஏக்கள்- மேடை ஏறியவுடன் கடுப்பாகி வெளியேறிய அமைச்சர்

 
ச்

மதுரை அரசு ஆய்வக நுட்புநர் சங்க விழாவுக்கு எம்எல்ஏக்கள் வராததால் அமைச்சர் நிர்மல்குமார் அதிருப்தியுடன் வெளியேறினார்.

மதுரை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற அரசு ஆய்வக நுட்புநர் சங்க வெள்ளி  விழா ஆண்டு மலர் வெளியீட்டு நிகழ்விற்கு, அமைச்சர் நிர்மல் குமார் 10 நிமிடங்களுக்கு முன்பே வந்தார். விழா அழைப்பிதழில் எம்.எல்.ஏ-க்கள் கோபிசன் மற்றும் கல்லாணை பெயர் இடம்பெற்றிருந்தனர். ஆனால் இரு எம்.எல்.ஏக்களும் விழாவுக்கு வராததால், மேடையில் ஏறிய அடுத்த நொடியே அமைச்சர் நிர்மல்குமார் புறப்பட்டுச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழா மேடையில் அமராமல் புறப்பட்டு சென்றது ஏற்பாட்டாளர்களை சங்கடத்தில் ஆழ்த்தியது.