நள்ளிரவில் மருத்துவமனையில் ஆய்வு என்ற பெயரில் தொல்லை கொடுத்த தவெக எம்.எல்.ஏ

 
நள்ளிரவில் மருத்துவமனையில் ஆய்வு என்ற பெயரில் தொல்லை கொடுத்த தவெக எம்.எல்.ஏ

புற நோயாளிகள் யாரும் இல்லாத நேரத்தில் இரவுநேரப் பணி பார்க்கும் மருத்துவர் ஓய்வு எடுப்பது இயல்புதான். அப்போது மருத்துவரை எழுப்பி ஆய்வு என்ற பெயரில் ஸ்ரீவைகுண்டம் MLA சரவணன் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. தவெக எம்.எல்.ஏ. சரவணன் மருத்துவரை துன்புறுத்தியதாக மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Image


அரசு மருத்துவர்கள் சங்கம் அளித்துள்ள விளக்கம் பின்வருமாறு:

1. 24 மணி நேர பணி குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை எந்த அரசாணையும் வெளியிடவில்லை.

2. அவசர சிகிச்சை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமே 24 மணி நேர மருத்துவரின் பணி. விபத்து பிரிவுக்கு நோயாளி வந்தவுடன், பணியில் உள்ள செவிலியர் / MNA / FNA 24 மணி நேர பணி மருத்துவருக்கு தகவல் கொடுக்க, அவர் வந்து நோயாளிக்கு சிகிச்சை அளிக்கிறார். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அரசு மருத்துவமனை 24 மணி நேர பணி மருத்துவர் செய்த தவறாக கருதப்படுவது என்ன?
அவர் தனது பணி அறையில் தங்கியிருந்து, பணியில் உள்ள செவிலியரின் தொலைபேசி அழைப்புக்குப் பிறகு எழுந்து வந்துள்ளார். அவர் எந்த தவறும் செய்யவில்லை.

மருத்துவர் பணி அறையின் கதவை உள்பக்கம் தாழிட்டு இருந்தார் என செய்தியில் வருகிறது.  நோயாளி எவரும் இல்லாததால் அவருடைய பணி அறையை மூடி உள்பக்கம் தாழிட்டு ஓய்வில் இருந்தார். இது சரியானது தான். ஏனெனில் இதே தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த காலங்களில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களிடம் திருட்டு முயற்சிகள் மற்றும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் தாக்குதல் முயற்சிகள் நடந்துள்ளன. அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு மனிதாபிமானமற்ற, மெதுவாக கொல்லும் 24 மணி நேர பணி முறையை ஒழித்து, உடனடியாக ஷிப்ட் முறையை கொண்டு வருமாறு DMS அவர்களை SDPGA கேட்டுக்கொள்கிறது எனக் குறிப்பிட்டுள்ளது.