கொளத்தூரில் முறைகேடு இல்லை; திமுகவினர் பொய் குற்றச்சாட்டை வைக்கிறார்கள்- வி.எஸ்.பாபு

 
கொளத்தூரில் முறைகேடு இல்லை; திமுகவினர் பொய் குற்றச்சாட்டை வைக்கிறார்கள்- வி.எஸ்.பாபு

கொளத்தூரில் EVM இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்றுவருவதாகவும், திமுக குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என சட்டமன்ற உறுப்பினர் VS பாபு பேட்டியளித்துள்ளார்.

கொளத்தூர் தொகுதி வாக்குப்பதிவில் முறைகேடு நடந்துள்ளது. கொளத்தூர் தொகுதியில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. கொளத்தூர், காஞ்சிபுரம், ராஜபாளையம் தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் சரிபார்க்கப்படுகிறது. வாக்கு இயந்திரங்கள் சரியாகத்தான் இயங்குகிறதா என சரிபார்க்க திமுக கோரியுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக பாதுகாக்கப்படவில்லை, VVPAT இயந்திரங்களில் பழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொளத்தூர் தொகுதியில் மின்னணு வாக்கு இயந்திரங்களில் எண்கள் மாறியுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்களில் முகவரி அட்டை புதிதாக உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தை சீல் வைத்ததில் குளறுபடி நடந்துள்ளது என திமுகவின் என்.ஆர்.இளங்கோ பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள  சட்டமன்ற உறுப்பினர் VS பாபு, “கொளத்தூரில் EVM இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்றுவருகிறது.  வாக்கு இயந்திரம் தொடர்பாக கொளத்தூரில் திமுகவினர் கூறிய புகார்கள் நிரூபிக்கப்படவில்லை. கொளத்தூரில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. திமுகவினர் பொய் குற்றச்சாட்டை வைக்கிறார்கள்.  ஆணையம் சிறப்பாகத் தேர்தலை நடத்தி உள்ளது, நாங்கள் எதற்கும் பயப்படமாட்டோம்; எதுவாக இருந்தாலும் சந்திக்கத் தயார்” என்றார்.