த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது - உதயநிதி ஸ்டாலின்..!

 
1

வி.எஸ். பாபு மறைவுக்கு, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

“சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவால் நீண்ட நாள் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. பாபுவின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், அவர் சார்ந்துள்ள இயக்கத்தினர் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.