“முதல்வரின் நிலைபாடு என்னை போன்ற பெண் எம்.எல்.ஏக்களுக்கு மிகப்பெரிய உத்வேகம்”- கனிமொழி

 
s

பெண் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மிக பெரிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளித்த மக்கள் முதல்வர் என தவெக எம்.எல்.ஏ. கனிமொழி புகழாரம் சூட்டியுள்ளார்.

Image

இதுகுறித்து தவெக எம்.எல்.ஏ. கனிமொழி தனது எக்ஸ் தளத்தில், “பெண்களின் கண்ணியத்தையும், பொதுமக்களின் மரியாதையையும் காக்கும் வகையில், அவதூறாகவும் இழிவாகவும் பேசுபவர்களுக்கு எதிராக எந்தச் சூழலிலும் சமரசம் செய்ய முடியாது என்ற மாண்புமிகு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களின் இன்றைய சட்டப்பேரவை கருத்து மிகவும் வரவேற்கத்தக்கது. பெண்களை இழிவுபடுத்தும் பேச்சுகளுக்கு எதிராக முதலமைச்சர் அவர்கள் எடுத்துள்ள இந்த உறுதியான நிலைப்பாடு, என்னைப் போன்ற பெண் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மிகப்பெரிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கிறது.

பெண்களின் கண்ணியம், பாதுகாப்பு மற்றும் உரிமைகளை பாதுகாப்பதில் அரசு உறுதியாக இருக்கும் என்பதை இந்த நிலைப்பாடு எடுத்துக்காட்டுகிறது. பொதுமக்களையும், குறிப்பாக பெண்களை அவமதிக்கும் எந்தவொரு செயலையும் ஏற்றுக்கொள்ள முடியாது.  தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும்! இந்த உறுதியான நிலைப்பாட்டிற்காக, மாண்புமிகு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களை இன்று நேரில் சந்தித்து எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.