யாரும் செய்யாத சாதனை! விஜய் அமைச்சரவையில் 7 பட்டியலின அமைச்சர்கள்!

 
ச்

விஜய் மக்கள் இயக்கத்தில் பயணித்த 15 பேருக்கு அமைச்சரவையில் விஜய் வாய்ப்பு வழங்கி உள்ளார். இதேபோல் விஜய் அமைச்சரவையில் 7 பட்டியலின அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளன.

Image
தமிழ்நாடு அமைச்சரவை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் 7 பட்டியலினத்தவர்கள் இடம்பெற்றுள்ளனர். ராஜ்மோகன், லோகேஷ் தமிழ்ச்செல்வன், கமலி, மதன் ராஜா, தென்னரக, காந்திராஜ், விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர்களாக இடம்பெற்றுள்ளனர். காங்கிரஸ் அமைச்சரவையில் முதல் பட்டியலின அமைச்சராக பி. கக்கன் இடம்பெற்றிருந்தார். திமுக ஆட்சியில் அண்ணாதுரை & கருணாநிதி அமைச்சரவைகளில் சத்தியவாணி முத்து இடம்பெற்றிருந்தார். கடந்த திமுக ஆட்சியில் மதிவேந்தன், கோவி. செழியன், சி.வி. கணேசன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் அமைச்சர்களாக இடம்பெற்றிருந்தனர். 1967 முதல் இதுவரை எந்த தமிழக அமைச்சரவையிலும் 7 பட்டியலின அமைச்சர்கள் இடம்பெற்றது இல்லை.  40 வயதுக்குட்பட்ட 12 இளம் அமைச்சர்கள் மற்றும் பிராமண வகுப்பைச் சேர்ந்த 2 பேருக்கு அமைச்சரவையில் பிரநிதித்துவம் (அறநிலையத்துறை உட்பட இரண்டு முக்கிய துறைகள்) வழங்கப்பட்டுள்ளது. 4 பெண் அமைச்சர்கள், தொழில்துறை உட்பட முக்கிய இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.