பெரம்பூரில் திரும்ப திரும்ப மின் வெட்டு பிரச்னை- நிர்மல் குமார்
சென்னையில் ஏற்படும் மின்தடையை உடனுக்குடன் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, மின் தட்டுப்பாடு எங்கேயும் இல்லை என அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மல்குமார், “மின் தட்டுப்பாடு எங்கேயும் இல்லை... மின் பகிர்மானத்தில் தான் உபகரணங்கள் உள்ளிட்டவற்றால் பிரச்சனை வருகிறது. பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் ஒரே மாதிரியான பிரச்சனை திரும்ப, திரும்ப ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதனை ஆய்வு செய்து வருகிறோம். சென்னையின் ஒரு சில இடங்களில் சில காரணங்களால் மின்தடை ஏற்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் வேண்டுமென்றே பியூஸ் பிடிங்கிட்டு போனார்கள். சில இடங்களில் ஒரே பிரச்சனை திரும்ப திரும்ப வருவதாக சொல்கிறார்கள். போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. த.வெ.க பொறுப்பு ஏற்ற பின் மின்தடையானது தொடர்ந்து பெரிய பூதாகரமாக மாறியுள்ளது” என்றார்.

