“ஸ்டாலின் சத்தியபாமாவை உருவ கேலி செய்திருப்பது கண்டிக்கதக்கது”- அமைச்சர் அருண்ராஜ்

 
அருண்ராஜ்

அப்பாவும் மகனும் பெண் சமுதாயத்தை எப்படி மதிக்கிறார்கள் என்பதற்கு இதுவே உதாரணம் என அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக அமைச்சர் அருண்ராஜ் தனது எக்ஸ் தளத்தில், “தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் இன்று பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஸ்டாலின்... நமது தமிழக வெற்றி கழக வேட்பாளர் அன்புச் சகோதரி திருமதி சத்தியபாமா அவர்களைப் பற்றி தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியதோடு, உருவ கேலியும் செய்திருக்கிறார்.  இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

முன்னாள் முதலமைச்சர் எவ்வளவு  தோல்விப் பதற்றத்தில் இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது. ஏற்கனவே இவரது மகன் உதயநிதி ஆபாச நிதியாக தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும்  நிலையில்...  அவர் ஏன் அப்படி பேசுகிறார் என்பதற்கான காரணத்தை இன்று ஸ்டாலின் உறுதிப்படுத்தி விட்டார்.  அப்பாவும் மகனும் பெண் சமுதாயத்தை எப்படி மதிக்கிறார்கள் என்பதற்கு இதுவே உதாரணம். This is DMK's DNA தாராபுரம் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.