“தவெக-அதிமுகவை இணைப்பதற்கான அனைத்து வேலைகளும் நடைபெறும்”- ஆதவ் அர்ஜூனா
திமுகவுடன் இணைந்து கூட்டணி உருவாக்க முயன்று இபிஎஸ் தோல்வி அடைந்தார் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜூனா, “இபிஎஸ் தொடர்ந்து தோல்விகளை சந்தித்துவருகிறார். திமுகவுடன் இணைந்து கூட்டணி உருவாக்க முயன்று இபிஎஸ் தோல்வி அடைந்தார். சாமானியர்களின் ஆட்சியை ஏற்படுத்தியவர் விஜய். இடைத்தேர்தலில் தவெக வெற்றியை சாத்தியப்படுத்தியதில் அதிமுக தொண்டர்களுக்கும் பங்கு உள்ளது. தவெக-அதிமுகவை இணைப்பதற்கான அனைத்து வேலைகளும் நடைபெறும். இரட்டை இலையும் விசில் சின்னமும் ஒன்று என்ற மக்கள் மனநிலையை பிரச்சாரத்தில் சொன்னோம். பணம் கொடுத்தால் வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணம் எங்கள் முதலமைச்சருக்கோ, அமைச்சருக்கோ இல்லை. ஆட்சி வந்து 6 மாதங்களாகியும் ஆளுங்கட்சியாக இருந்தும் ஒரு ரூபாய் கூட ஓட்டுக்கு காசு கொடுக்காமல் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றுள்ளோம்.தேர்தலுக்கு முன்பு பிரச்சாரம் செய்ய திமுகவின் சூழ்ச்சியால் அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் இன்று கிராமம் கிராமமாக சென்று வாக்கு கேட்டு வெற்றி பெற்றுள்ளோம்” என்றார்.

