“மதிமுக எம்.எல்.ஏ.க்கள் வைகோ உடன் இருந்திருந்தால் அவர்கள் அமைச்சர் ஆகி இருப்பார்கள்”- ஆதவ் அர்ஜூனா
மதிமுக எம்.எல்.ஏ.க்கள் வைகோ உடன் இருந்திருந்தால் அவர்கள் அமைச்சர் ஆகி இருப்பார்கள் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறினார்.
தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “சும்மா இருந்த மதிமுகவை தொட்டு விட்டீர்கள்.. இனிமே புது வைகோ அண்ணனை பார்ப்பீர்கள். குடும்ப ஆட்சியை தூக்கி எறியுறது தான் வேலையே ! 40 ஆண்டுகளாக என் கூட இருந்தவர்கள் துரோகிகள் என எனக்கு தெரியவில்லை என்றார் வைகோ. மதிமுக எம்எல்ஏக்களை திமுக விலைக்கு வாங்கியது. 1996-இல் வைகோ பேசியதைதான் 2026-ஆம் ஆண்டு விஜய் செயல்படுத்தினார். பாமக இல்லையென்றால் எடப்பாடியே ஜெயித்திருக்க முடியாது. ண்ணன் விஜயகாந்த் எந்தக் கட்சியைத் தூக்கி எறிந்தாரோ, அந்தக் கட்சியில் அக்கா பிரேமலதா சேர்ந்திருக்காங்க.. இதை விஜயகாந்த் அண்ணனின் ஆன்மாவே மன்னிக்காது.
திமுகவின் தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் இபிஎஸ். அதிமுக 10% கட்சியாக மாறிவிட்டது, ஜெயலலிதா விசுவாசிகள் இபிஎஸ்க்கு எதிராக மாறியுள்ளனர். எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் அதிமுகவிற்காக அறக்கட்டளை ஒன்றை உருவாக்கியுள்ளனர். அதில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருக்கின்றன. இந்தச் சொத்துக்களைக் கைப்பற்றுவதற்கும், அடுத்துத் தன்னுடைய மகன் மிதுனை தலைமைக்குக் கொண்டுவருவதற்கும், உதயநிதி ஸ்டாலினுடன் எடப்பாடி பழனிசாமி கைகோர்த்துவிட்டார். அதனால்தான், அவர் எங்களுடைய தலைவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சித்தார். திமுகவின் பிரச்சாரத்தையே அவரும் செய்கிறார்.” என்றார்.

