அரசுப் பள்ளியை கேலிக்கூத்தாக்கிய தவெகவினர்-கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்
திருவாரூர் மாவட்ட தவெக துணை செயலாளர் அகிலன் தனது பிறந்தநாளை இடும்பாவனம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியம், குன்னலூர் ஊராட்சி, எக்கல் பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தவெகவைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் பள்ளியில் உள்ள குடிநீர் வசதி மற்றும் கட்டிடப் பராமரிப்பு நிலையை ஆய்வு செய்திருக்கிறார்கள்.
— இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) June 19, 2026
கட்சிக்காரங்களுக்கு ஆய்வுசெய்ய யார்… pic.twitter.com/wgLBSNLPAI
திருவாரூர் மாவட்ட தவெக துணை செயலாளர் அகிலன். இவர் தனது கட்சி நிர்வாகிகளுடன் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியம், குன்னலூர் ஊராட்சி, எக்கல் பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சென்று, பள்ளியில் உள்ள குடிநீர் வசதி மற்றும் கட்டிடப் பராமரிப்பு நிலையை ஆய்வு செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் திருவாரூர் மாவட்ட தவெக துணை செயலாளர் அகிலன் தனது பிறந்தநாளை இடும்பாவனம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இவர் மக்கள் பிரதிநிதியாக அரசு அதிகாரியாக இல்லாட நிலையில் ஆய்வு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

