தவெக 108 தொகுதிகளில் முன்னிலை- தேர்தல் ஆணையம்
May 4, 2026, 11:53 IST1777875838769
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் தவெக முன்னிலையில் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனித்து களமிறங்கிய தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் தவெக முன்னிலையில் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், திருவொற்றியூர், போளூர், திருவண்ணாமலை, ஒட்டபிடாரம், ஸ்ரீ வைகுண்டம், தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தவெக வெற்றி பெற்றுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, அதிமுக 64, திமுக 40, பாமக 6, காங்கிரஸ் 5 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதேபோல் பாஜக 3, சிபிஐ 2, சிபிஎம் 1, விசிக 1, அமமுக 1, தேமுதிக 1 தொகுதிகயில் முன்னிலையில் உள்ளது.

