தமிழகம் முழுவதும் தவெக முன்னிலை- 3ம் இடத்துக்கு தள்ளப்பட்ட திமுக
May 4, 2026, 09:42 IST1777867923210
தமிழக முழுவதும் முதல் சுற்று வாக்குகள் பெரும்பாலான தொகுதிகளில் நிறைவு பெற்றுள்ள நிலையில் தமிழக வெற்றி கழகம் முன்னிலையில் உள்ளது.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆரம்பம் முதலே தவெகவே முன்னிலையில் இருந்த நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு ஒன்றரை மணி நேரம் ஆகும் நிலையில் 80க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழக வெற்றி கழகம் முன்னிலையில் உள்ளது. சுமார் 62 இடங்களில் அதிமுகவும், 49 இடங்களில் திமுகவும் முன்னிலையில் உள்ளது. இதேபொல் தமிழக வெற்றிக் கழகம் சென்னை முழுவதும் உள்ள 16 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது.

