தவெக தலைவர் விஜய் யுகாதி வாழ்த்து!

 
vijay

தெலுங்கு மற்றும் கன்னட சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தெலுங்கு மற்றும் கன்னட சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இந்தப் புத்தாண்டில் அனைவரின் வாழ்விலும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, ஆரோக்கியம் நிலைத்து, சகோதரத்துவம் தழைத்தோங்க வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.