பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்காத திமுக அரசை அகற்றுவோம் - விஜய்

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து வீடியோவில், அனைவருக்கும் வணக்கம். இன்று சர்வதேச மகளிர் தினம். தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மா, அக்கா, தங்கை, தோழிகள் என அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள். சந்தோஷம்? பாதுகாப்பு இருந்தால் தானே மகளிர் தினம் சந்தோஷமா இருக்கும். பாதுகாப்பு இல்லாமல் சந்தோசம் எப்படி இருக்கும்? என்று நீங்கள் நினைப்பது எனக்கு நல்ல புரியுது.
— TVK Vijay (@TVKVijayHQ) March 8, 2025
நீங்களும், நாமும் சேர்ந்தே திமுக அரசை தேர்வு செய்தோம். ஆனால், அவர்கள் இப்படி ஏமாற்றுவார்கள் என்பது இப்போதுதான் தெரிகிறது. எல்லாமே இங்கு மாறும், மாற்றத்துக்கு உரியதுதானே. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில், நாம் அனைவரும் சேர்ந்து, மகளிர் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய திமுகவுக்கு உரிய பாடம் புகட்ட வேண்டும். திமுக அரசை மாற்றுவோம். மகளிர் தினமான இன்று அதற்கான உறுதி ஏற்போம். அனைத்து சூழலிலும் உங்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக நான் நிற்பேன், நன்றி என பேசியுள்ளார்.