இன்று சீரடி செல்கிறார் தவெக தலைவர் விஜய்..!
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் வரும் மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளார்.நேற்று அதிகாலை 5 மணிக்கு திருச்செந்தூர் சென்ற விஜய், கடலில் நீராடிய பிறகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் சார்பில் விஜய்க்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, திருச்செந்தூர் கோவிலில் தவெக சார்பில் சத்ரு சம்ஹார யாகம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் வரும் 30ஆம் தேதி 232 தொகுதி தவெக வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.
இந்த நிலையில், அடுத்தக்கட்டமாக மகாராஷ்டிர மாநிலம் சீரடி சாய் பாபா கோவிலுக்கு விஜய் செல்லத் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.விஜய் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மகாராஷ்டிரா சென்று அங்கிருந்து ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் முடிவு வெளியாக இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், விஜய் தொடர்ந்து இரண்டாவது கோயிலுக்கு பயணம் செய்ய இருப்பது பெரும் கவனம் பெற்றுள்ளது.

