மொழி விவகாரத்தில் பேசி வைத்து திமுக, பாஜக அரசுகள் மக்களை ஏமாற்றுகிறார்கள் - விஜய் பேச்சு
Updated: Feb 26, 2025, 13:44 IST1740557659710

மொழி விவகாரத்தில் பேசி வைத்து திமுக, பாஜக அரசுகள் மக்களை ஏமாற்றுகிறார்கள் என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்று வரும் தவெக 2வது ஆண்டு துவக்க விழாவில் நிர்வாகிகள் மத்தியில் கட்சி தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மக்களுக்கு பிடித்துப் போன ஒருவர் அரசியலுக்கு வந்தால்,சிலர் எதிர்க்கிறார்கள். என்னை எப்படி வீழ்த்தலாம் என சிலர்குழப்பத்தில் உள்ளனர். 1967, 1977 பாணியில் தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வருவோம். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் மாற்றத்தை
கொண்டு வருவோம். தவெகவில் இளைஞர்களே அதிகம், நமது கட்சி ஒன்றும் பண்ணையார்கள் கட்சி அல்ல. பண்ணையார்களை அரசியலை விட்டு அகற்றுவது தான் நமது முதல் வேலை.
அண்ணா, எம்ஜிஆர் கட்சி தொடங்கிய போதும் அவர்களின் பின்நின்றவர்கள் இளைஞர்களே. மொழி விவகாரத்தில் பேசி வைத்து திமுக, பாஜக அரசுகள்
மக்களை ஏமாற்றுகிறார்கள். கல்வி நிதி விவகாரத்தில் குழந்தை தனமாக சண்டையிடுகின்றனர். பாஜகவும், திமுகவும் பேசி வைத்துக் கொண்டு மாற்றி மாற்றி ஹேஷ் டேக் போட்டு விளையாடுகின்றனர். தனிப்பட்ட முறையில் யார் வேண்டுமானாலும், எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம். சுயமரியாதையை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது என கூறினார்.