எந்த பெரிய கட்சிக்கும் சளைத்தது அல்ல தவெக - விஜய் பேச்சு

 
vijay

நாம் எல்லா மொழிகளையும் மதிப்போம், ஆனால் வேறொரு மொழியை அரசியல் ரீதியாக திணிப்பதை அனுமதிக்க முடியாது என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். 

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், நாம் எல்லா மொழிகளையும் மதிப்போம், வேறொரு மொழியை அரசியல் ரீதியாக திணிப்பதை அனுமதிக்க முடியாது. 3வது மொழியை திணிக்கும் மும்மொழி கொள்கையை உறுதியாக எதிர்க்கிறோம். 

எந்த பெரிய கட்சிக்கும் சளைத்தது அல்ல தவெக, விரைவில் பூத் கமிட்டி மாநாடு நடத்த உள்ளோம். தவெக பூத் கமிட்டி மாநாட்டுக்கு பிறகு எங்களின் பலம் அனைவருக்கும் தெரியும். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை, எது எப்போது வேண்டுமானாலும் மாறும். அரசியலில் யார், யாரை எப்போது எதிர்ப்பார்கள் என தெரியாது, என்னை வீழ்த்த நினைக்கிறார்கள் என கூறினார்.