இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் உளமார்ந்த ரமலான் நல்வாழ்த்துகள் - விஜய்!

 
vijay

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

உலகம் முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தலைவர்கள் பலரும் இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்,  தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நோன்பிருந்து உறவுகளுடன், நட்பு நெஞ்சங்களுடன் அன்பைப் பரிமாறி,  ஈகைத் திருநாளாம் ரமலான் திருநாளைக் கொண்டாடும். 
உலகெங்கும் வாழும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகள். இந்நாளில் அனைவரிடமும் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை, வளர்பிறையாக வளர வாழ்த்தி மகிழ்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.