ஒருநாள் ரமலான் நோன்பு இருக்கும் தவெக தலைவர் விஜய்

 
Vijay tvk

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நாளை இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ள நிலையில், இதற்காக அவர் ஒரு நாள் ரமலான் நோன்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மும்முரமாக அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நாளை இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இற்கான ஏற்பாடுகளை அக்கட்சியை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா கவனித்து வருகிறார். 

இந்த நிலையில்,  இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளதை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஒரு நாள் ரமலான் நோன்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்லாமிய பெருமக்களுடன் இணைந்து விஜய் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நாளை பங்கேற்க உள்ளார். இதற்காக அவர் ஒரு நாள் ரமலான் நோன்பு இருக்கிறார்.