தொண்டர்கள் புடைசூழ வேலூர் வந்து கொண்டிருக்கிறார் தவெக தலைவர் விஜய்..!
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொல்லமங்கலம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று கழக நிர்வாகிகளிடையே உரையாற்றவுள்ளார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்க, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, 4,900 நபர்களுக்கு மட்டும் நுழைவு சீட்டு வழங்கப்பட்டுள்ளது. நுழைவு சீட்டு இல்லாதவர்களுக்கு உள்ளே அனுமதி கிடையாது என தவெக சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், சிறுவர், சிறுமியர், பள்ளி மாணவ, மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களுக்கெல்லாம் நுழைவு சீட்டு வழங்கgப்படவில்லை என்று தவெக நிர்வாகம் நேற்று அறிவித்திருந்தது.
இந்நிலையில் வாலாஜா சுங்கச்சாவடியில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு. விஜயின் பிரச்சார வேனை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள். மலர் தூவி தங்கள் தலைவனை வரவேற்றனர். தவெக தலைவர் விஜயை காண கடல் அலை போல் குவிந்து வரும் தொண்டர்கள்.

