தவெக 2ம் ஆண்டு தொடக்க விழா - பூஞ்சேரி வந்தடைந்தார் விஜய்!

தமிழக வெற்றிக் கழக 2வது ஆண்டு துவக்க விழாவில் பங்கேற்க, அக்கட்சியின் தலைவர் விஜய், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி வந்தடைந்தார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராஜ விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தற்போது கட்சியின் கட்டமைப்புகளை சரிசெய்து வருகிறார். அதற்காக மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள், வியூக வகுப்பாளர்களை நியமித்து வருகிறார். இதன் காரணமாக பனையூரில் உள்ள அக்கட்சியின் அலுவலகம் பரபரப்புடன் காணப்படுகிறது. தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் இன்று நடைபெறவுள்ளது. 2ம் ஆண்டு விழாவையொட்டி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உரை நிகழ்த்த உள்ளார். தேர்தல் வியூகம், சுற்றுப்பயணம், கூட்டணி உள்ளிட்டவை குறித்து விஜய் உரையாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக 2வது ஆண்டு துவக்க விழாவில் பங்கேற்க, அக்கட்சியின் தலைவர் விஜய், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி வந்தடைந்தார். பூஞ்சேரியில் நடைபெறும் தமிழக வெற்றி கழகத்தின் ஆண்டு விழா அரங்கில் 2,500 நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்க அனுமதி பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.