“சண்முகம் பேசுன பேச்சுக்கு ஜெயலலிதா இருந்திருந்தால் இந்நேரம் நடக்கக்கூடிய நிகழ்வே வேற”- கு.ப.கிருஷ்ணன்
ஜெயலலிதா இருந்திருந்தால் இந்நேரம் நடக்கக்கூடிய நிகழ்வே வேற..! பெண்கள் குறித்து அவதூறாக பேசியிருந்தால் இன்றைய முதல்வர் ஸ்டாலின் பதவியை விட்டே தூக்கி இருப்பார் என முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய கு.ப.கிருஷ்ணன், “காக்கை கூட்டம் ரெண்டு இருக்கிறது. ஒரு கூட்டத்திலே கல்லறைந்து போட்டால் காக்கை எல்லாம் பறந்து போய்விடும். இது பொழிய வருகின்ற கார்மேக கூட்டம் அது தமிழக வெற்றி கழகம். இந்த கார்மேக கூட்டம் மக்களுக்கு மடையை பெய்து மகிழ்ச்சியான வாழ்வை தரும் என்று மக்கள் நம்புகிறார்கள். நாங்கள் மக்களை நம்புகிறோம். மக்களை நம்பி நாங்கள் இருக்கிறோம். எங்களை அவர்கள் நம்புகிறார்கள். வெற்றியை நோக்கி நாங்கள் வெற்றி பயணத்தை தொடர்ந்து கொண்டிருப்போம்.
விஜய் என்ற மாபெரும் சக்தியை கொண்ட தலைவன் இந்த கட்சியை தலைமை ஏற்று நடத்தி கொண்டிருக்கிறார் என வெற்றி நிச்சயம் என்பதை நீங்கள் பார்க்க போகிறீர்கள். வாக்காளர்களை விடை கொடுத்து வாங்குவதற்கு நாங்கள் தயாரல்ல. எங்கள் இயக்கம் தோன்றியதற்கு பிறகுதான் இன்றைக்கு மக்களுக்கு 5000 ரூபாய் கூட வந்து கொண்டிருக்கிறது. ஏன் இன்னும் சொல்லப்போனால் காலையிலே எழுந்து வீட்டினுடைய முதல் கதவை திறக்கின்ற பொழுது அண்டா குண்டா பாத்திரங்கள் எல்லாம் வைத்திருக்கிறார் என்று சொன்னால் இவர்கள் மக்கள் மீது கொண்ட ஆசையால் வைத்திருக்கிறார்களா விஜயின் மீது கொண்ட வெறுப்பை அவர்கள் உணர்ந்து எதிர்க்க வேண்டும் என்பதற்காக இலவச திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் மக்களை சந்திக்க வேண்டிய விதத்தில் நாங்கள் சந்திப்போம். ஜெயலலிதா இருந்திருந்தால் இந்நேரம் நடக்கக்கூடிய நிகழ்வே வேற..! பெண்கள் குறித்து அவதூறாக பேசியிருந்தால் இன்றைய முதல்வர் ஸ்டாலின் பதவியை விட்டே தூக்கி இருப்பார்” என்றார்.

