“தவெகவில் இணைந்தது காமராசரின் பேத்தி இல்லை”- காமராசரின் பேரன்

 
அச்ச் அச்ச்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் முன்னிலையில் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான காமராசரின் பேத்தி மயூரி இணைந்ததாக செய்தி வெளியான நிலையில், அவர் காமராசரின் பேத்தியே இல்லை என காமராசர் தங்கை வழி பேரன் காமராஜ் தெரிவித்துள்ளார்.


காமராசரின் வம்சாவளி பேத்தி எனக் கூறி வரும் மயூரி என்பவர் தவெகவில் இணைந்துள்ள நிலையில், தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டியளித்த தங்கை வழி பேரன் காமராஜ், “காமராஜரும் மயூரி ரத்த சொந்தமும் இல்லை, நேரடி வாரிசும் இல்லை. அவர் தவறான தகவலை பதிவு செய்துவருகிறார். காமராஜர் தந்தையை தத்தெடுத்து வளர்த்த உறவு முறை எப்படி காமராஜருக்கு வாரிசாக வர முடியும். இதற்கு எனது கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறேன். மயூரி அரசியல் செய்து கொள்வதற்காக காமராஜர் பெயரை தவறாக பயன்படுத்த வேண்டும்” என்றார்.