"எம்எல்ஏவாக தொடர வேண்டும் என இசக்கி சுப்பையா அளித்த மனு ஆய்வில் உள்ளது"- ஜே.சி.டி.பிரபாகர்
Sep 4, 2026, 20:50 IST1788535206826
இசக்கி சுப்பையா ராஜினாமாவை திரும்பப் பெறும் கடிதத்தை பற்றி சட்டப்பேரவை முடிந்தவுடன் பதிலளிப்பேன் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “இசக்கி சுப்பையா ராஜினாமாவைடததிரும்ப பெறும் கடிதத்தை என்னிடம் கொடுத்திருக்கிறார். கடிதம் எனது ஆய்வில் உள்ளது. இசக்கி சுப்பையா ராஜினாமாவை திரும்பப் பெறும் கடிதத்தை பற்றி சட்டப்பேரவை முடிந்தவுடன் பதிலளிப்பேன். என்னை இந்த சபாநாயகர் பொறுப்பில் வரவேண்டும் என்று விரும்பியவர் முதல்வர் விஜய் தான். எனக்கு கிடைக்கும் மக்களின் பாராட்டுகள் எல்லாம் அவருக்கு தான் சேரும்” என்றார்.

