“வாடகை வாய் டுபாகூர்களையும், நீ 'Gen Z திமுக' இல்லை; Gelusil திமுக என கூறுகிறது பொது சனம்”- தவெக விமர்சனம்

 
ச்

ஆட்சியில் இருக்கும்போது ரோடே போடாமல் கருவூல பணத்தை திருடிய 420 கும்பல், இனி ஆட்சிக்கே வரமுடியாது என்ற பதற்றத்தில் மாணவர் போராட்டத்தை திருட முயன்று திருட்டு முழி முழிக்கிறது என தவெக விமர்சிக்கிறது. 

Image

இதுதொடர்பாக தவெக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில், “இந்த வாரம்! புரட்டு திமுகவின் திருட்டு வாரம்!ஆட்சியில் இருக்கும்போது ரோடே போடாமல் கருவூல பணத்தை திருடிய 420 கும்பல், இனி ஆட்சிக்கே வரமுடியாது என்ற பதற்றத்தில் மாணவர் போராட்டத்தை திருட முயன்று திருட்டு முழி முழிக்கிறது.மதிப்புமிகு பாலன் இல்லத்தை பகடைக்காய் ஆக்க நினைத்த வயிற்றெரிச்சல் வாரிசுகளையும், வாடகை வாய் டுபாகூர்களையும், நீ 'Gen Z திமுக' இல்லை; Gelusil திமுக என கூறுகிறது பொது சனம்! கொட்டுப்படுவதற்கென்றே அளவெடுத்து செய்த அப்பா கட்சி அம்பலப்பட்டு நிற்கிறது. எதையதையோ திருடியவர்கள் மாணவர் போராட்ட புகழையுமா திருட முயற்சிக்க வேண்டும்? இதுவும் ஒரு பிழைப்பா” எனக் குறிப்பிட்டுள்ளது.