107... 109 ஆக உயர்ந்தது! இடதுசாரிகள் விலகினாலும் தவெகவுக்கு கவலையில்லை

 
திமுக தூர சக்தி... அதிமுக தீர்ந்து போன சக்தி! திமுக நம்மை எதிர்க்க எதிர்க்க... நம்மையே- விஜய்

ஒரு நடிகர் தானே என நினைத்தார்கள். ஆனால் இன்று அதே நடிகர் விஜய், தமிழக அரசியல் கணக்கையே மாற்றி எழுதி இருக்கிறார்.


234 தொகுதிகள் கொண்ட தமிழக சட்டசபையில் ஆட்சியை பிடிக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், தவெகவுக்கு ஆரம்பத்தில் 107 இடங்கள் தான் இருந்தன. தனிப்பெரும்பான்மை இல்லை என்றாலும், ஆட்சியமைக்கும் வாய்ப்பை விஜய் விடவில்லை. கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை பிடித்தார்.

தமிழக சட்டசபை மொத்தம் - 234 தொகுதிகள்
தற்போது காலியாக உள்ளவை - 5 தொகுதிகள்
செயல்பாட்டில் உள்ள இடங்கள் - 229
பெரும்பான்மைக்கு தேவை - 115

இந்த சூழலில் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் தவெக வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தவெக பலம் 107-ல் இருந்து 109 ஆக உயர்ந்துள்ளது. தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் கூட்டணி ஆதரவு கணக்கு தான் விஜய்க்கு கைகொடுத்துள்ளது. தவெக - 109, காங்கிரஸ் - 5, விசிக - 2, ஐயூஎம்எல் - 2 ஆக மொத்தம் = 118 இடங்கள்! பெரும்பான்மைக்கு தேவை 115 என்ற நிலையில், இடதுசாரிகள் விலகினாலும் இந்த ஆட்சிக்கு ஆதரவு பலம் கிடைத்துள்ளது. இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 5 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தவெகவின் பலம் 114ஆக உயரும். அடாவது திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றால், அதன் பலம் 114 ஆக உயரும். அத்துடன் காங்கிரஸின் 5 இடங்களும் ஆதரவாக இருந்தால் மொத்தம் 119  என்ற எண்ணிக்கையை எட்டலாம் என கணிக்கப்பட்டுள்ளது. 70 ஆண்டு பாரம்பரியம் கொண்ட திமுக, 50 ஆண்டு வரலாறு கொண்ட அதிமுக, டெல்லி பாஜகவின் கணக்குகளுக்கு நடுவில் விஜய்யின் அரசியல் நகர்வு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.