“தவெக தமிழ்நாடு, புதுச்சேரியை தவிர வேறு எந்த மாநிலத்திலும் தொடங்கப்படவில்லை”- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 
“சட்டசபையில் பார்ட்டி பண்டுனு தான் சொன்னேன்.. எடுத்தாங்க பாருங்க ஒரு ஓட்டம்”- விஜய்

தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் இதுவரை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளம், புதுச்சேரி, தெலுங்கானா பகுதிகளில் தவெகவை உருவாக்க திட்டமிட்டுவருகிறது. அதற்கான வியூகங்கள் வகுக்க தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் மைனாரிட்டி அரசு(கூட்டணி அரசு) அமைந்ததைபோல 2029 மத்தியிலும் அப்படிப்பட்ட அரசு அமைய தவெக எதிர்பார்க்கிறது. தென்மாநிலங்களில் அதிகபட்சமாக 60 தொகுதிகளை பெற்றுவிட்டால் மத்தியில் அமையும் மைனாரிட்டி அரசுக்கு ஆதரவளித்து தன் கட்டுப்பாட்டில் வழிநடத்த திட்டமிட்டுவருகிறது. முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் உரைகள் பிற பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, பல்வேறு சமூக தளங்களில் டிரெண்டாக்கப்பட்டுவருகின்றன. தமிழகத்திற்கு அப்பால் தனது அமைப்பு ரீதியான விரிவாக்கத்தைத் தொடங்கியுள்ள தவெக, மேற்கு வங்காளத்திலும், கேரளாவிலும் அலுவலகத்தை தொடங்கியதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் இதுவரை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படவில்லை. சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளைப் பொருட்படுத்தாமல், தலைமைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என தவெக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.