#BREAKING 3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தவெக அரசு
தமிழக அரசு கடந்த மூன்று மாதங்களில் மூலதன திட்டங்களுக்காக, 20 ஆயிரத்தி 881 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட இந்தக் காலகட்டத்தில் நிலுவையில் உள்ள மொத்த கடன்களுக்கான வட்டிச் செலவாக 14 ஆயிரத்தி 618 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு, கடந்த மூன்று மாதங்களில் மூல தன திட்டங்களுக்காக, 20,881 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. இந்த காலத்தில், நிலுவையில் உள்ள மொத்த கடன்களுக்கு, 14,618 கோடி ரூபாய் வட்டி செலுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு, மாநில சரக்கு மற்றும் சேவை முத்திரைத்தாள் வரி, மற்றும் பதிவு கட்டணம், விற்பனை மற்றும் வர்த்தகம் மீதான வரி என, பல வகையில் வருவாய் கிடைக்கிறது. அரசு பணியாளர்கள் சம்பளம், ஓய்வூதிகடன் போன்றவற்றுக்காக செலவு செய்யப்படுகிறது. வரவை விட செலவு அதிகம் இருப்பதால் கடன் பத்திரங்கள் விற்பனை, வங்கிகள் போன்றவற்றில் கடன் வாங்கப்படுகின்றன. இவற்றில் கடன் பத்திரங்கள் விற்பனை வாயிலாக பெறப்படும் கடன் தான் அதிகம். இவ்வாறு வாங்கப்படும் கடன்களில், சாலை அமைத்தல்,பாலம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளை அரசு மேற்கொள்கிறது.
நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில், 20,881 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது. இந்த முழு ஆண்டில் 1.22 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க தமிழக அரசு திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக அரசின் மொத்தக்கடன் ஏற்கனவே 10 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதற்காக, கடந்த மூன்று மாதங்களில் மட் டும், 14,618 கோடி ரூபாய் வட்டி செலுத்தப்பட்டு உள்ளது.

