“விஜய் மாமா முதலமைச்சரானது சந்தோஷமா?- பள்ளியில் ரீல்ஸ் எடுத்த தவெக நிர்வாகியின் பதவி பறிப்பு
காஞ்சிபுரம் அருகே அரசு பள்ளி வகுப்பறையில் ரீல்ஸ் எடுத்த தவெக ஒன்றிய செயலாளர் ராஜேஷ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, தளவராம்பூண்டி அரசு தொடக்கப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று, முதலமைச்சர் விஜய் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து வெளியிட்டனர். குறிப்பாக தவெக ஒன்றிய செயலாளர் ராஜேஷ் என்பவர், “இது யாருனு தெரிகிறதா? இவர் என்னவா இருக்கிறார்?” என மாணவர்களிடம் கேட்டு முதலமைச்சர் விஜய் படத்தை வகுப்பறையில் மாட்டி ரீல்ஸ் எடுத்தது சர்ச்சையானது. இந்த செயலுக்கு கண்டனங்கள் வலுத்த நிலையில், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி ராஜேஷ் கட்சியிலிருந்து நீக்கம் செய்து காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும், வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு நடவடிக்கை எடுத்துள்ளார்.

