தவெக நிகழ்ச்சியா? அரசு ஆய்வுக் கூட்டமா? அமைச்சருக்கு இணையாக அமர்ந்த தவெக நிர்வாகி

 
s

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் நடந்த ஆய்வு கூட்டம் தவெக நிகழ்ச்சி போல நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் விக்னேஷ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திண்டுக்கல் ஆட்சியர் துர்கா, எஸ்பி பிரதீப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த அரசு நிகழ்வில் அமைச்சர் விக்னேஷூக்கு இணையாக, அரசு பதவியில் இல்லாத தவெக மாவட்ட செயலாளர் தர்மா நிகழ்வில் அமர்ந்திருந்தார். தவெக மாவட்ட செயலாளர் எப்படி அரசு நிகழ்ச்சியில் அமைச்சருக்கு இணையாக அமர முடியும் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அரசு ஆய்வு கூட்டமா? அல்லது கட்சி ஆலோசனைக் கூட்டமா என்ற குழப்பத்தில் அதிகாரிகள் இருந்தனர். அதேசமயம், திண்டுக்கல் ஆய்வுக் கூட்டத்தில் திமுக, அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு முறையான அழைப்பு இல்லை என்றும் புகார் எழுந்துள்ளது.