தமிழக வெற்றி கழகத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது!

 
Vijay tvk Vijay tvk

தமிழக வெற்றி கழகத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சி இன்று மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.  
 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராஜ விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தற்போது கட்சியின் கட்டமைப்புகளை சரிசெய்து வருகிறார். அதற்காக மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள், வியூக வகுப்பாளர்களை நியமித்து வருகிறார். இதன் காரணமாக பனையூரில் உள்ள அக்கட்சியின் அலுவலகம் பரபரப்புடன் காணப்படுகிறது. தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 70 ஆயிரம் பூத் கமிட்டி செயலாளர்களை நியமனம் செய்ய அக்கட்சி உத்தரவிட்டுள்ளது.  
 
இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.  2ம் ஆண்டு விழாவையொட்டி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உரை நிகழ்த்த உள்ளார். இந்த நிகழ்ச்சியில், தேர்தல் வியூக வகுப்பாளரும், தவெக சிறப்பு ஆலோசகருமான பிரசாந்த் கிஷோர் கலந்துகொள்ளவுள்ளார். தேர்தல் வியூகம், சுற்றுப்பயணம், கூட்டணி உள்ளிட்டவை குறித்து விஜய் உரையாற்றவுள்ளதாக தகவல் வெளீயாகியுள்ளது.