“குறைந்த பட்ச புரிதல் இல்லாமல் தொகுதி மறுவரையறை குறித்து தவறானக் கருத்து பரப்பப்படுகிறது”- தவெக
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் குறைந்த பட்ச புரிதல் இல்லாமல் தொகுதி மறுவரையறை குறித்து தவறானக் கருத்து பரப்பப்படுவதாக தவெக விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக தவெக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில், “மாமல்லபுரத்தில் இன்று நடந்த 31வது தென் மண்டல குழு கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் ஆற்றப்பட்ட உரையில் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் வெற்றி பெற்ற தென் மாநிலங்களின் தற்போதைய பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கும் பரந்த தொலைநோக்கு கருத்தை தெரிவித்தார்கள். தமிழ் நாடு சட்டமன்றத்தில் 12.8.2026 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இதனைச் செயல் வடிவில் கூறுகிறது. அதாவது, மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543 ஆக நிர்ணயித்தல், மாநிலங்களுக்கு இடையேயான தற்போதைய இட ஒதுக்கீடு விகிதாச்சாரதை மாற்றாமல் தொடரச் செய்தல், மற்றும் வருங்காலத் தேர்தல்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்தல் ஆகிய பொருளில் தீர்மானங்களை நிறைவேற்றி 12.8.2026 அன்றே மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கும் நேர்முகக் கடிதம் எழுதிய நிலையில், இது குறித்து குறைந்த பட்ச புரிதல் இல்லாமல் தொகுதி மறுவரையறை குறித்து தவறானக் கருத்து பரப்பப்படுகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

